The big ocean
நம் பூமி மூன்று பங்கு நீர் பரப்பையும் ஒரு பங்கு நில பரப்பையும் கொண்டுள்ளது. நிலப்பரப்பு பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பிரமாண்ட உலகம் உள்ளது. அங்கு பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பாசிகள், மீன் இனங்கள், கடற்பசுக்கள், ஆமைகள், சீல், எண்காலி, நண்டு, பீரங்கி வகை மீன்கள், கடற்குதிரை, கடல் கீரி, கடல் சிங்கம், மின் விலாங்கு மீன், கோளா போன்ற விஷ மீன்கள், ஜெல்லி மீன்கள், ஆக்டோபஸ் மற்றும் நட்சத்திர மீன்கள் போன்றவை கடலில் வாழ்கின்றன. கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் சூரிய ஒளி மிகவும் குறைவு. பவளப்பாறைகள்(Coral reefs) - இவை பவளம் எனும் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் உள்ளது. இவை கடல்களின் மலைக் காடுகள் எனப்படும். இவை கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இவை பசிபிக் பெருங்கடல் மற்றும் வெப்பமான கடல் பகுதிகளில் காணப்படும். மீன்கள்(Fish) - இவை நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு...