Plants and Tamil literary flowers
தாவரங்கள் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களிடமிருந்து தான் நாம் உணவை பெறுகிறோம். தாவரங்கள் ஆலை(Plantae) வகுப்பைச் சேர்ந்தது. இவை ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலம் உணவை தயாரிக்கிறது. தாவரங்கள் நிலைப்புத்தன்மை வாய்ந்தவை மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. எனவே, இதனை 'நிலைத்திணை' என்பர்.
இதுவரை 2,87,655 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பூக்கும் தாவரங்கள் மற்றும் பிரையோஃபைட்டுகள்
( பூக்காத தாவரங்கள்) என இருவகைப்படும். பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை 2,58,650 மற்றும் பிரையோஃபைட்டுகளின் எண்ணிக்கை 18,000 ஆகும்.
பூக்கள்
தாவரங்களில் பாசிகள் (algae), புற்கள், செடி, கொடிகள், மரங்கள் மற்றும் பன்னம்( Ferns or Pteridophytes) ஆகியவை அடங்கும்.
பாசிகள்
மரங்கள்
பன்னம் அல்லது வித்திலியம், இவை மிகு பழங்காலத்தில் தோன்றியவை. இவை நுண்வித்துக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
பன்னம்
தாவரங்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடையது. நன்னீர் தாவரங்கள் சில கம்மல் செடி( water ferns), ஆம்பல்( water Lilly), சைப்ரஸ் டுபர்ஸ்( Cyperus tubers),லெம்னாஜிபா
( lemna gibba) போன்றவை ஆகும்.
மிகச்சிறிய தாவரம் பாசிகள் மற்றும் மிகப்பெரிய தாவரம் 'சிகோயா' மரங்கள் ஆகும். தாவரங்கள் உணவாக, மருந்தாக, பொருட்கள் தயாரிக்க மற்றும் பல்வேறு உயிரினங்களின் உறைவிடமாக திகழ்கிறது. ஆரம்ப காலங்களில் இலைகளை உடையாகவும் பயன்படுத்தினர். பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் தற்போது பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிப்பொருள்கள் கிடைக்கின்றது.
சங்க இலக்கிய மலர்கள் சிலவற்றின் பெயர்களாவன,
புழகு, குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகப்பூ, நள்ளிருணாறி, குருந்தம், வேங்கை, நறவம், புன்னாகம், பாரம், பீரம், பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, வஞ்சி, மராஅம், தணக்கம், ஈங்கை, இல்லம், கொன்றை, அடும்பு, கைதை, கோடல், காஞ்சி, வழை, பாங்கர், மணிக்குலை, கொகுடி, ஞாழல், சேடல், மௌவல் , சிறுசெங்குரலி, செம்மல், செங்கருங்காலி, பிடவம், வள்ளி, வாழை, தாழை, நெய்தல், தாமரை, தளவம், பாலை, தில்லை, முல்லை, கஞ்சங்குல்லை,கரந்தை, சண்பகம், மா( புளிமா), திலகம், மருதம், கருவிளம், குரவம், வாகை, வெட்சி, மணிச்சிகை, தேமா, காந்தள், அனிச்சம், ஆம்பல், குறிஞ்சி, குவளை.
With regards,
Sandhiya Saravanan
Comments
Post a Comment