The animal kingdom
பூமியில் காணப்படும் உயிரினங்களில் விலங்குகளும் ஒன்று. விலங்குகள் அனிமாலியா(Animalia) வகுப்பைச் சேர்ந்தது. விலங்கினங்களை மீடாசொவா(Metazoa) என்றும் அழைப்பர்.இவை யூகேர்யோடிக் பல செல் உயிரி ஆகும்.இவை தன்னிச்சையாக நகரும் இயல்பை பெற்றுள்ளது.எனவே, இவை தாவரங்கள், பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகிறது. எனவே, விலங்கினங்களை தனியாக வகைப்படுத்தினர். இவற்றின் உடலமைப்பு தசைகள், திசுக்கள் மற்றும் எலும்புகளால் ஆனது. இவை பால்முறை இனப்பெருக்கம் செய்கின்றன. மற்றும் விந்தணுக்கள் மூலம் கருமுட்டைகள் உருவாகி புதிய உயிர்கள் பிறக்கின்றன. சில விலங்குகள் பாலில்லா இனப்பெருக்கம்(Parthenogenesis) செய்யும்.
விலங்குகளை இருவகையாக பிரிக்கின்றன. அவை,
1. முதுகு நாண் உடையவை
2. முதுகு நாண் அற்றவை
முதுகு நாண் உடையவை - மீன்கள், இருவாழ்வன ( தவளை, முதலை), ஊர்வன
( பாம்பு), பறவைகள், பாலூட்டிகள்
முதுகு நாண் அற்றவை - கடற்பஞ்சு, ஜெல்லி மீன், புழுக்கள், கரப்பான் பூச்சி, தேள், பூரான், ஆக்டோபஸ், நத்தை, நட்சத்திர மீன்கள் மற்றும் ஒரு செல் உயிரி போன்றவை ஆகும்.
விலங்குகள் தனித்துவமான பண்புகளையும் உடலமைப்புகளையும் பெற்றுள்ளது.
சிவிங்கப்புலி - உலகின் மிக வேகமான நில விலங்கு( மணிக்கு 109.4 - 120.7 கி.மீ.)
கரடி - மோப்ப சக்தி அதிகம் உடையவை.
ஒட்டகம் - நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியவை (4_5 நாள்கள்) மற்றும் காலத்திற்கேற்ப உடல் வெப்பநிலை 34° செல்சியஸ் அவற்றிலிருந்து 41.7° செல்சியஸ் வரை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது.
பச்சோந்தி - தான் இருக்கும் இடத்தின் நிறத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையது.
நீல திமிங்கலம் - உலகில் மிகப்பெரிய விலங்கு(30 மீட்டர்)
ஆமை - மெதுவாக நகரும் மற்றும் மெதுவாக சுவாசிக்கும். எனவே, இவை மிக நீண்ட நாள் வாழக்கூடியவை. மிக பழமையான உயிரினம் ஆகும்.
சிங்கம் - இவை கம்பீரமான உடலமைப்பு பெற்றுள்ளது. எனவே, இதனை காட்டின் ராஜா என கூறுவர். மணிக்கு 80.5 கி.மீ. வேகத்தில் செல்லும்.
காடுகளில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. அவை அனைத்தும் ஒரு உணவு சங்கிலியை கொண்டுள்ளது. சில விலங்குகள் வீடுகளில் செல்ல பிராணியாக வளர்க்கப் படுகின்றன. பல்வேறு உயிரினங்கள் மற்றும் காடுகள் அழிந்து கொண்டே வருகிறது. இதில் மனிதர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இனியாவது காடுகளையும் உயிரினங்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
Save forest and save wildlife
With regards,
Sandhiya Saravanan
Comments
Post a Comment