The big ocean

               நம் பூமி மூன்று பங்கு நீர் பரப்பையும் ஒரு பங்கு நில பரப்பையும் கொண்டுள்ளது. நிலப்பரப்பு பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பிரமாண்ட உலகம் உள்ளது. அங்கு பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பாசிகள், மீன் இனங்கள், கடற்பசுக்கள், ஆமைகள், சீல், எண்காலி, நண்டு, பீரங்கி வகை மீன்கள், கடற்குதிரை, கடல் கீரி, கடல் சிங்கம், மின் விலாங்கு மீன், கோளா போன்ற விஷ மீன்கள், ஜெல்லி மீன்கள், ஆக்டோபஸ் மற்றும் நட்சத்திர மீன்கள் போன்றவை கடலில் வாழ்கின்றன.
கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் சூரிய ஒளி மிகவும் குறைவு.



பவளப்பாறைகள்(Coral reefs) -  இவை பவளம் எனும் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் உள்ளது. இவை கடல்களின் மலைக் காடுகள் எனப்படும். இவை கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இவை பசிபிக் பெருங்கடல் மற்றும் வெப்பமான கடல் பகுதிகளில் காணப்படும்.



மீன்கள்(Fish) -  இவை நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும். இவை தலை, உடல், வால் என மூன்று பகுதிகளாக உள்ளது. இவை துடுப்பின்  உதவியுடன் நீந்தி செல்லும்.இவை நீரிலேயே  சுவாசிக்கின்றது. மற்றும் நீரிலேயே இனப்பெருக்கம் செய்யும். இங்கு பல்வேறு வண்ணங்களில் மீன்கள் உள்ளன. புதைப்படிவ பதிவுகளில் இருந்து மீனினத்தின்  ஆதிவுயிரி தாடைகளற்றதாக இருந்துள்ளது. முதல் தாடையுள்ள மீன் இனம் பிளாக்கோடெர்மி , இவை படிமத்திலிருந்து கண்டறியப்பட்டது.  லாம்பயர் மீன்கள்  மிக பழமையான மீன் இனம் ஆகும்.
        ஆராய்ச்சியாளர்கள் மீன்களை மூன்று  வகையாகப் பிரித்துள்ளனர். மீனின் உடல் அமைப்பு மற்றும் எலும்பு அமைப்பு பொருத்து  தாடையற்ற மீன்கள், எலும்பு மீன்கள் மற்றும் குருத்தெலும்பு மீன்கள்  என பிரிக்கப்பட்டுள்ளது.   33,100 வகையான மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

பாசிகள்(Algae) -  பலவிதமான பாசிகள் உள்ளன. இவை தாவரங்களை போல ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது. இவை ஒரு செல் உயிரினம் வகையின்  கீழ் வரும். இவை ஈரப்பதமான இடங்களில் காணப்படும். இவை தான் முதலில் தோன்றிய தாவர வகை ஆகும்.  இவை சிவப்பு, பச்சை மற்றும் நீல-பச்சை நிறத்தில் காணப்படும்.

சுறா(Shark) -  வேகமாக நீந்த கூடியவை. இவற்றில் பல சிற்றினங்கள் உள்ளன. கூர்மையான பற்களை கொண்டுள்ளது.இதன் உடல் எலும்பு கசையிழை என்ற குருத்தெலும்பால் ஆனது. இவற்றிற்கு மோப்பத்திறன் அதிகம். மற்றும் கேள் திறனும் அதிகம். 440 வகையான சுறா இனங்கள் உள்ளன.

ஆமை(Turtle) -  இவை நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் ஆகும். இவை முட்டையிடுவதற்காக நிலத்திற்கு வரும். இவை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னரே இவை தோன்றியுள்ளன. இதன் இதயம் மிகவும் நிதானமாக துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்கு காரணம்.

எண்காலி(Octopus) -  இவை எட்டு கிளை உறுப்புகளை பெற்றுள்ளதால் எண்காலி என்பர். இவற்றை சாக்கு கணவாய் என்றும் அழைப்பர். 300 வகையான எண்காலிகள் உள்ளன. இவற்றிற்கு எலும்புகள் இல்லை. இவற்றின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் ஈமோசயனின்( Hemocyanin) என்னும் புரத பொருள் ஆகும். இவை நிறத்தை மாற்றும் இயல்புடையவை.

நண்டு(Crab) -  இவை எல்லா கடல்களிலும் வாழ்கின்றன. இவை பல அளவுகளில் காணப்படுகின்றன. இவை மேல் ஓட்டினை பெற்றுள்ளது. இவை 20 சதவீதம் கடல் உணவாக உள்ளது. இவற்றின் வகைகள் தேங்காய் நண்டு, குளுவான் நண்டு மற்றும் நீலக்கால் நண்டு.

கடற்குதிரை(Seahorse) -  இவை ஒரு வகை மீன் இனம் ஆகும். இதன் தலைப்பகுதி குதிரையைப் போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது. இவை வால் பகுதியை பெற்றுள்ளது. இவை மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது. 

மின் விலாங்கு மீன்(Eel) -  இவை மின்னாற்றல் மீன் இனம் ஆகும். இவை தற்காத்துக் கொள்ளவும் , வேட்டையாடுவதற்காகவும் மின் அதிர்வுகளை உற்பத்தி செய்கிறது.இவை தென் அமெரிக்கா நீர் நிலைகளில் காணப்படும்.

எண்ணெய் திமிங்கலம்(Sperm whale) -  காற்றுப்புரையுடையி‌ (Physeter) எனும் பேரினத்தில் இன்று வாழும் ஒரே இனம் இதுதான்.  இவற்றை வேட்டையாடும் திமிங்கலங்கள் ஓர்க்காக்கள் ஆகும்.

கோள மீன்(Puffer fish) -  இவற்றின் உடலமைப்பு தடித்த உருளை வடிவமாக இருக்கும். இவற்றின் மேலுள்ள முட்களில் தான் விஷம் தேங்கி‌ நிற்கும். இந்த நச்சு பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படுகிறது.இவை சயனைடு விட அதிக விஷத்தன்மை கொண்டது.

கடல்வாழ் உயிரினங்களில் பல உணவாக பயன்படுத்தப்படுகிறது. மற்றும் வணிக ரீதியாகவும் பயன்படுகிறது. பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. 
 அவற்றை நம்மால் முடிந்த வரை பாதுகாப்போம். இன்னும் காணக் கிடைக்காத 
பல்வேறு உயிரினங்கள் கடலில் உள்ளன.




With regards, 
Sandhiya Saravanan

Comments

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

About virus and Viral Infections

Plants and Tamil literary flowers