Posts

Showing posts from August, 2020

HIV virus and About viruses treatment

Image
HIV virus and About viruses treatment வைரஸ்( virus) என்பது தொற்றுநோய் கிருமி ஆகும்.  HIV வைரஸ் ( Human Immunodeficiency virus) தான் எய்ட்ஸ்(AIDS) நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் மனிதனுடைய ரத்த வெள்ளையணுக்களான  T helper cells- ஆன CD4 செல்களை தாக்கி  தன்னை நகல் எடுத்துக் கொள்கிறது. இவை மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனை தாக்கி அழிக்கும். நோய் பரவுதல்: இரத்த பரிமாற்றம், உடலுறவு, ஊசிகள், தாய்ப்பால். அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், நிணநீர் சுரப்பிகளின் வீக்கம், வலிகள், எடை குறைவு, தோல் வடுக்கள், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு.   சிகிச்சை முறைகள்( Treatment): ART ( Antiretroviral therapy) இவை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் ஆபத்தான கட்டத்தை குறைக்க உதவும் மற்றும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும். வைரஸ் நோய்களுக்கான பொதுவான சிகிச்சை முறைகள்( Treatment): NRTIs (Nucleoside reverse transcriptase inhibitors) NNRTIs (Non-Nucleoside reverse transcriptase inhibitors) Integrase inhibitors Protease inhibitors Fusion inhibitors CCR5 antagonists and post attachment inhibitors சில சிகிச்சைகளுக்கு ஒன்

About virus and Viral Infections

Image
                          About virus and viral infections வைரஸ் (Virus) என்பது தொற்றுநோய் கிருமி ஆகும். இது ஒரு நச்சுயிரி ஆகும். இவை மிக நுண்ணிய அளவில் காணப்படும். இவற்றை நுண்ணோக்கி (Microscope) மூலம் தான் பார்க்க இயலும். இவை உயிருள்ளவற்றில் மட்டுமே வாழும் இயல்புடையது.இவை மற்றொரு உயிரினத்தின் உடலில் உள்ள செல்களில் நுழைந்தவுடன் அந்த செல்களின் கட்டுப்பாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளும். வைரஸ்களால்(Viruses) தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்ய இயலாது.இவை மற்றொரு உடலின் DNA- வை வைத்து தான் இனப்பெருக்கம் செய்யும். வைரஸ் (Virus)  அதன் மரபணு வைத்து இரண்டு வகையாக பிரிக்கப்படும்.அவை,  DNA வைரஸ்  RNA வைரஸ் DNA வைரஸ் மேலும் மரபணு இழைகள் வைத்து இருவகையாக பிரிக்கின்றனர். ஓரிழை DNA -  e.g : நேனோ வைரஸ்  ஈரிழை DNA  -  e.g : மையோ வைரஸ் RNA  வைரஸ் மேலும் மரபணு இழைகள் வைத்து இருவகையாக பிரிக்கின்றனர். ஓரிழை RNA -  e.g : ரெட்ரோ வைரஸ்  ஈரிழை RNA  -  e.g : ரியோ வைரஸ் வைரஸ் எந்த செல்லில் உள்ளதோ அந்த செல்களின் அமைப்பிற்கேற்ப மாறுவதால் தான் இன்று வரை வைரஸ் தொற்றுகளை(viral infections) குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்க

Medicinal Plants and their uses

Image
  Medicinal Plants and their uses நம் பூமியில் பல்வேறு விதமான தாவரங்கள் உள்ளன. அவற்றில் பல மருத்துவ குணங்களை (Medicinal uses) கொண்டுள்ளது. நம் முன்னோர்கள்  மருத்துவ தாவரங்களை (Medicinal plants) எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கூறியுள்ளனர். "உணவே மருந்து" என்னும் சொல்லிற்கேற்ப நம் பாரம்பரிய உணவு முறைகள் நமக்கு ஒரு அருமருந்து ஆகும். அத்தகைய மருத்துவ பயன்கள் (Medicinal uses) கொண்ட சில தாவரங்களை பார்ப்போம். அருகம்புல் உடலின் நச்சு நீக்கியாக, நீரிழிவு நோய், சிறுநீர் போக்கு அதிகரிக்க, உடல் எடையை குறைக்க, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு, ரத்த போக்கு தடுக்க, பசி உணர்வினை தூண்ட, சுவாச கோளாறுகளை நீக்க, எலும்புகளுக்கு உறுதி அளிக்க, தோல் நோய்கள் மற்றும் வாத நோய், மூலம் போன்ற பலவற்றை குணப்படுத்தும் மருத்துவ பயன்களை (Medicinal uses) பெற்றுள்ளது. துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், தலை வலி, கண் பிரச்சனைகள், வாய் பிரச்சனைகள், இதய நோய், சளி, இருமல், நீரிழிவு நோய், சிறுநீரக கற்கள், மன அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ பயன்களை (Medicina