Medicinal Plants and their uses

 Medicinal Plants and their uses

நம் பூமியில் பல்வேறு விதமான தாவரங்கள் உள்ளன. அவற்றில் பல மருத்துவ குணங்களை (Medicinal uses) கொண்டுள்ளது. நம் முன்னோர்கள்  மருத்துவ தாவரங்களை (Medicinal plants) எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கூறியுள்ளனர். "உணவே மருந்து" என்னும் சொல்லிற்கேற்ப நம் பாரம்பரிய உணவு முறைகள் நமக்கு ஒரு அருமருந்து ஆகும். அத்தகைய மருத்துவ பயன்கள் (Medicinal uses) கொண்ட சில தாவரங்களை பார்ப்போம்.


அருகம்புல்

உடலின் நச்சு நீக்கியாக, நீரிழிவு நோய், சிறுநீர் போக்கு அதிகரிக்க, உடல் எடையை குறைக்க, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு, ரத்த போக்கு தடுக்க, பசி உணர்வினை தூண்ட, சுவாச கோளாறுகளை நீக்க, எலும்புகளுக்கு உறுதி அளிக்க, தோல் நோய்கள் மற்றும் வாத நோய், மூலம் போன்ற பலவற்றை குணப்படுத்தும் மருத்துவ பயன்களை (Medicinal uses) பெற்றுள்ளது.


துளசி

மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.

காய்ச்சல், தொண்டைப்புண், தலை வலி, கண் பிரச்சனைகள், வாய் பிரச்சனைகள், இதய நோய், சளி, இருமல், நீரிழிவு நோய், சிறுநீரக கற்கள், மன அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ பயன்களை (Medicinal uses) பெற்றுள்ளது.

தூதுவளை

புற்றுநோய், ஜலதோஷம், ஆண்மை குறைபாடு, காய்ச்சல், சுவாச நோய்கள், ஞாபக சக்தி அதிகரிக்க, பித்தம், ரத்த சோகை, விஷ கடி, நீரிழிவு நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ குணங்களை (Medicinal uses) கொண்டுள்ளது.

 பிரண்டை

சுறுசுறுப்பு பெற, தொற்று நோய்கள், பல் சம்பந்தமான பிரச்சனைகள், வாயு கோளாறுகள், எலும்பு சார்ந்த பிரச்சனைகள், மாதவிடாய், இதய நோய்கள், சுவாச கோளாறுகள் மற்றும் மூலம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

கரிசலாங்கண்ணி

மஞ்சள் காமாலை, அல்சர், மறதி, ரத்தசோகை, இளநரை, கண் குறைபாடுகள், பல் சம்பந்தமான பிரச்சனைகள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு நோய், சிறுநீர் கோளாறுகள், ரத்த அழுத்தம், மது அடிமைத்தனம், புகையிலை பழக்கம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய் ,ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், வறட்டு காமாலை, ஊது காமாலை, வெள்ளை காமாலை போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ குணங்களை (Medicinal uses) பெற்றுள்ளது ‌.

வேப்பிலை

வயிற்று பிரச்சனைகள், விஷ முறிவு, தோல் நோய்கள், புற்றுநோய், பல் சம்பந்தமான பிரச்சனைகள், சுவாச கோளாறுகள் மற்றும் புண்கள் போன்றவற்றை குணப்படுத்த வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள்

சிறந்த நுண்ணுயிர்க்கொல்லி, நச்சுத்தன்மையை போக்கவல்லது, சமையலில் பயன்படுத்தப்படுகிறது, உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாக்க, வயிறு தொடர்பான நோய்கள், பூச்சி கடிகள், கிருமி நாசினியாக, அல்சைமர் நோய் (மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு)(plaque) போன்ற நோய்களை குணமாக்கும் அற்புதமான மருத்துவ பயன்களை (Medicinal uses) பெற்றுள்ளது மற்றும் இவற்றை திரவ வடிவத்தில் பயன்படுத்தினால் வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம். மஞ்சளின் மிளிரும் தன்மையை வைத்து கண்டறியப்படுகிறது.

இஞ்சி

வலி நிவாரணம், மாதவிடாய், ஒவ்வாமை, வயிறு தொடர்பான பிரச்சனைகள், வாந்தி, கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள், நீரிழிவு நோய், முடக்குவாதம், சளி மற்றும் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் மருத்துவ குணங்களை (Medicinal uses) கொண்டுள்ளது.

மிளகு

தொற்றுநோய், போதை பழக்கம், மலட்டுத்தன்மை, வாயு தொந்தரவுகள், புற்றுநோய், சளி மற்றும் இருமல், பல் சம்பந்தமான பிரச்சனைகள், பொடுகு தொந்தரவுகள், தோல் நோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் எதிர்மறையான எண்ணங்களை தடுக்க உதவுகிறது.

கறிவேப்பிலை

சர்க்கரை நோய், இரத்த சோகை, இதய நோய்கள், செரிமான பிரச்சனைகள், சளி, முடி நன்றாக வளர, கல்லீரலை பாதுகாக்க போன்றவற்றை குணப்படுத்த கூடியது.

பூண்டு

ரத்த அழுத்தம், இதய நோய்கள், எலும்புகள் வலுப்பெற, வயிறு தொடர்பான நோய்கள், நீரிழிவு, புற்றுநோய், நச்சு நீக்கம், பெண்கள்  பிரச்சனைகள், கண், வாய், பற்கள் நலம் போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.



With regards,

Sandhiya Saravanan


Comments

Post a Comment

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers

About virus and Viral Infections