Himalaya - A trip to Mount Kailash

               
                 மலைகள், இயற்கையின் படைப்பில் உயரமான மற்றும் நம் மனங்களை கவரும் அழகிய படைப்பு ஆகும். பல மலைகள் தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. அவற்றுள் ஒன்று தான் கயிலாய மலை ஆகும்.


இவை இமயமலை தொடரில் உள்ளது. இம்மலை சீனாவின் திபெத்திய பீடபூமியில்
அமைந்துள்ளது. இங்கு தான் சட்லெஜ், 
சிந்து மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகிறது.

    
                                 சிந்து நதி

 
                                  சட்லெஜ் நதி


                                   பிரம்மபுத்திரா நதி

                   கயிலாய மலையை கைலாச மலை, கைலை மலை மற்றும் திருக்கயிலாய மலை என்றும் அழைக்கப்படும். இம்மலை சர்வேஸ்வர் பார்வதி , கந்தவர்கள் மற்றும் முனிவர்கள் வாழும் இடமாக கருதப்படுகிறது.
                 கயிலாய மலைக்கு பலரும் யாத்திரை மேற்கொண்டனர்.அவை புனித பயணமாக கருதப்பட்டது. பின்பு சீனா திபெத்தை ஆக்கிரமித்தது மற்றும் யாரையும் அனுமதிக்கவில்லை. பின்பு 1981-இல் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி சீன அரசு இந்தியர்களை யாத்திரைக்கு அனுமதித்தது.                      தற்போது இந்திய அரசு 2020-இல் உத்தரகாண்ட் மாநிலம் வழியாக சாலை அமைத்துள்ளது.இது இந்திய வழி எளிமையான பாதை ஆகும்.
                கயிலாயத்தை தரிசித்த சில அடியார்கள் காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார், ஔவையார் மற்றும் பலர் ஆகும். பலர் இம்மலையின் இரகசியங்களை அறிய சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை.
               கயிலாய மலை அருகே இரண்டு புகழ்பெற்ற ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் ஏரி மற்றும் இராட்சதலம் ஏரி ஆகும்.

மானசரோவர் ஏரி - இது உலகத்திலேயே உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி ஆகும். இந்த ஏரியில் கயிலாய மலையின் பிரதிபிம்பம் அழகாக காட்சியளிக்கும். அதனை "கௌரி சங்கர்" என்றும் அழைப்பர். இந்த குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும். இதன் சுற்றளவு சுமார் 88 மீட்டர் மற்றும் 90 மீட்டர் ஆழமும் கொண்டது. இந்த ஏரியில் தான் சிந்து, சட்லெஜ் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகிறது.

இராட்சதலம் ஏரி - இது உவர் நீர் ஆகும். இதன் வடமேற்கு முனையில் இருந்து தான் சட்லெஜ் ஆறு உருவாகிறது. இந்த ஏரியை புனித நீராக கருதுவதில்லை. இந்த ஏரியில் தான் இராவணன் சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஏரி சிவப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் இருக்கும்.இந்த ஏரி நான்கு தீவுகளை கொண்டது.


         மானசரோவர் ஏரி வட்டமாக சூரிய வடிவமைப்பிலும் , இராட்சதலம் ஏரி பிறை வடிவமைப்பு கொண்டதாகவும் இருப்பதால் இவற்றை  ஒளி மிக்கது என்றும் இருள்படர்ந்தது என்றும் அழைப்பர்.




With regards,
Sandhiya Saravanan

Comments

  1. பயனுள்ள தகவல். அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers

About virus and Viral Infections