The Bermuda Triangle or Devils Triangle

                பெர்முடா முக்கோணம் என்பது ஒரு மர்மமான பகுதியாகவே காணப்படுகிறது. இதனை சாத்தானின் முக்கோணம் ( Devils Triangle) என்றும் அழைப்பர். இங்கு கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு மர்மமான முறையில் பல வருடங்களாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணமல் போகின்றன. இதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.                                                 பெர்முடா முக்கோணம் என்பது வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புளோரிடா, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

                 இந்த பகுதியில் வினோதமான மற்றும் அமானுஷ்யமான விஷயம் உள்ளது என்று நம்பப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் மறைக்கப்பட்ட பிரமிடு தான் காரணம் என்று சிலர் கருதுகிறார்கள். 
                 பெர்முடா முக்கோணம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
                 அறிவியல் கொண்டு விளக்கம் கொடுத்த பல விஷயங்களும் உண்டு மற்றும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத பல மர்மமான விஷயங்களும் உண்டு.
                  வேற்று கிரக வாசிகளின் செயல்பாடு என்றும் கூறப்படுகிறது. காணமல் போன அட்லாண்டிஸ் நகரம் இன்னும் கடலுக்குள் அமைந்துள்ளதாகவும் அதுதான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதீத மீத்தேன் வாயு வெளிப்படுவதாலும் நீரின் அடர்த்தி குறைந்து கப்பல்கள் மூழ்குகின்றன என்றும் கூறுவர்.
                   பெர்முடா முக்கோணம் பற்றி பலரும் பல நாவல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை முன்னிட்டு கூறுகின்றனர். இவ்வாறு பலரும் பல கருத்துக்களை முன் வைக்க மர்மமான முடிச்சு அவிழ்ந்து விட்டது. பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தான் இதற்கு காரணம் ஆகும்.


                 இங்கு மேகங்கள் அறுங்கோண வடிவம் மற்றும் நேர் கோடு வடிவில் அமைந்துள்ளது. இது மிகவும் அசாதாரண ஒன்று ஆகும். இங்கு ஏற்படும் புயல்களினாலும், மேகத்தின் தாக்கத்தினாலும் மற்றும் மேலெழும் அலைகளாலும் பெர்முடா முக்கோணம் உருவாகிறது. இந்த காரணங்களினால் தான் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூழ்கடிக்கப் படுகிறது.



With regards,
Sandhiya Saravanan

Comments

Post a Comment

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers

About virus and Viral Infections