Posts

HIV virus and About viruses treatment

Image
HIV virus and About viruses treatment வைரஸ்( virus) என்பது தொற்றுநோய் கிருமி ஆகும்.  HIV வைரஸ் ( Human Immunodeficiency virus) தான் எய்ட்ஸ்(AIDS) நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் மனிதனுடைய ரத்த வெள்ளையணுக்களான  T helper cells- ஆன CD4 செல்களை தாக்கி  தன்னை நகல் எடுத்துக் கொள்கிறது. இவை மனிதனுடைய நோய் எதிர்ப்புத் திறனை தாக்கி அழிக்கும். நோய் பரவுதல்: இரத்த பரிமாற்றம், உடலுறவு, ஊசிகள், தாய்ப்பால். அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், நிணநீர் சுரப்பிகளின் வீக்கம், வலிகள், எடை குறைவு, தோல் வடுக்கள், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு.   சிகிச்சை முறைகள்( Treatment): ART ( Antiretroviral therapy) இவை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் ஆபத்தான கட்டத்தை குறைக்க உதவும் மற்றும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும். வைரஸ் நோய்களுக்கான பொதுவான சிகிச்சை முறைகள்( Treatment): NRTIs (Nucleoside reverse transcriptase inhibitors) NNRTIs (Non-Nucleoside reverse transcriptase inhibitors) Integrase inhibitors Protease inhibitors Fusion inhibitors CCR5 antagonists and post attachment inhibitors சில ...

About virus and Viral Infections

Image
                          About virus and viral infections வைரஸ் (Virus) என்பது தொற்றுநோய் கிருமி ஆகும். இது ஒரு நச்சுயிரி ஆகும். இவை மிக நுண்ணிய அளவில் காணப்படும். இவற்றை நுண்ணோக்கி (Microscope) மூலம் தான் பார்க்க இயலும். இவை உயிருள்ளவற்றில் மட்டுமே வாழும் இயல்புடையது.இவை மற்றொரு உயிரினத்தின் உடலில் உள்ள செல்களில் நுழைந்தவுடன் அந்த செல்களின் கட்டுப்பாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளும். வைரஸ்களால்(Viruses) தன்னிச்சையாக இனப்பெருக்கம் செய்ய இயலாது.இவை மற்றொரு உடலின் DNA- வை வைத்து தான் இனப்பெருக்கம் செய்யும். வைரஸ் (Virus)  அதன் மரபணு வைத்து இரண்டு வகையாக பிரிக்கப்படும்.அவை,  DNA வைரஸ்  RNA வைரஸ் DNA வைரஸ் மேலும் மரபணு இழைகள் வைத்து இருவகையாக பிரிக்கின்றனர். ஓரிழை DNA -  e.g : நேனோ வைரஸ்  ஈரிழை DNA  -  e.g : மையோ வைரஸ் RNA  வைரஸ் மேலும் மரபணு இழைகள் வைத்து இருவகையாக பிரிக்கின்றனர். ஓரிழை RNA -  e.g : ரெட்ரோ வைரஸ்  ஈரிழை RNA  -  e.g : ரியோ வைரஸ் வைரஸ் எந்த செல்லில் உள்ளதோ ...

Medicinal Plants and their uses

Image
  Medicinal Plants and their uses நம் பூமியில் பல்வேறு விதமான தாவரங்கள் உள்ளன. அவற்றில் பல மருத்துவ குணங்களை (Medicinal uses) கொண்டுள்ளது. நம் முன்னோர்கள்  மருத்துவ தாவரங்களை (Medicinal plants) எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கூறியுள்ளனர். "உணவே மருந்து" என்னும் சொல்லிற்கேற்ப நம் பாரம்பரிய உணவு முறைகள் நமக்கு ஒரு அருமருந்து ஆகும். அத்தகைய மருத்துவ பயன்கள் (Medicinal uses) கொண்ட சில தாவரங்களை பார்ப்போம். அருகம்புல் உடலின் நச்சு நீக்கியாக, நீரிழிவு நோய், சிறுநீர் போக்கு அதிகரிக்க, உடல் எடையை குறைக்க, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு, ரத்த போக்கு தடுக்க, பசி உணர்வினை தூண்ட, சுவாச கோளாறுகளை நீக்க, எலும்புகளுக்கு உறுதி அளிக்க, தோல் நோய்கள் மற்றும் வாத நோய், மூலம் போன்ற பலவற்றை குணப்படுத்தும் மருத்துவ பயன்களை (Medicinal uses) பெற்றுள்ளது. துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், தலை வலி, கண் பிரச்சனைகள், வாய் பிரச்சனைகள், இதய நோய், சளி, இருமல், நீரிழிவு நோய், சிறுநீரக கற்கள், மன அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ பயன்களை (Medicina...

The big ocean

Image
               நம் பூமி மூன்று பங்கு நீர் பரப்பையும் ஒரு பங்கு நில பரப்பையும் கொண்டுள்ளது. நிலப்பரப்பு பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பிரமாண்ட உலகம் உள்ளது. அங்கு பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பாசிகள், மீன் இனங்கள், கடற்பசுக்கள், ஆமைகள், சீல், எண்காலி, நண்டு, பீரங்கி வகை மீன்கள், கடற்குதிரை, கடல் கீரி, கடல் சிங்கம், மின் விலாங்கு மீன், கோளா போன்ற விஷ மீன்கள், ஜெல்லி மீன்கள், ஆக்டோபஸ் மற்றும் நட்சத்திர மீன்கள் போன்றவை கடலில் வாழ்கின்றன. கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் சூரிய ஒளி மிகவும் குறைவு. பவளப்பாறைகள்(Coral reefs) -  இவை பவளம் எனும் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் உள்ளது. இவை கடல்களின் மலைக் காடுகள் எனப்படும். இவை கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இவை பசிபிக் பெருங்கடல் மற்றும் வெப்பமான கடல் பகுதிகளில் காணப்படும். மீன்கள்(Fish) -  இவை நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு...

The animal kingdom

Image
               பூமியில் காணப்படும் உயிரினங்களில் விலங்குகளும் ஒன்று. விலங்குகள் அனிமாலியா(Animalia) வகுப்பைச் சேர்ந்தது. விலங்கினங்களை மீடாசொவா(Metazoa) என்றும்‌ அழைப்பர்.இவை யூகேர்யோடிக் பல செல் உயிரி ஆகும்.இவை தன்னிச்சையாக நகரும் இயல்பை பெற்றுள்ளது.எனவே, இவை தாவரங்கள், பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகிறது. எனவே, விலங்கினங்களை தனியாக வகைப்படுத்தினர். இவற்றின் உடலமைப்பு தசைகள், திசுக்கள் மற்றும் எலும்புகளால் ஆனது. இவை பால்முறை இனப்பெருக்கம் செய்கின்றன. மற்றும்  விந்தணுக்கள் மூலம் கருமுட்டைகள் உருவாகி புதிய உயிர்கள் பிறக்கின்றன. சில விலங்குகள் பாலில்லா இனப்பெருக்கம்(Parthenogenesis) செய்யும். விலங்குகளை இருவகையாக பிரிக்கின்றன. அவை,                      1. முதுகு நாண் உடையவை                     2. முதுகு நாண் அற்றவை முதுகு நாண் உடையவை - மீன்கள், இருவாழ்வன ( தவளை, முதலை), ஊர்வன ( பாம்பு), பறவைகள், பாலூட்டிகள் முதுகு நாண் அற்...

Plants and Tamil literary flowers

Image
                                தாவரங்கள் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களிடமிருந்து தான் நாம் உணவை பெறுகிறோம். தாவரங்கள் ஆலை(Plantae) வகுப்பைச் சேர்ந்தது. இவை ஒளிச்சேர்க்கை (Photosynthesis)  மூலம் உணவை தயாரிக்கிறது. தாவரங்கள் நிலைப்புத்தன்மை வாய்ந்தவை மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. எனவே, இதனை 'நிலைத்திணை' என்பர்.                    இதுவரை 2,87,655 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பூக்கும் தாவரங்கள் மற்றும் பிரையோஃபைட்டுகள் ( பூக்காத தாவரங்கள்) என இருவகைப்படும். பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை 2,58,650 மற்றும் பிரையோஃபைட்டுகளின் எண்ணிக்கை 18,000 ஆகும்.                                       பூக்கள்                              தாவரங்களில் பாசிகள் (alga...