Birds


இயற்கையின் அழகில் பறவைகளும் ஒன்று. சுதந்திரத்திற்கு பேர் போனது பறவை இனம் ஆகும். "இறக்கைகள் கொண்ட இருகாலி"யைப் பறவைகள் என்பர்.பறவைகளை புள் என்றும் கூறுவர். பறவைகள் முதுகுநாணி உடையவை. இவை விலங்கின வகைகளின் கீழ் வரும். விலங்குகளில் சிறகுகள் உடைய பிராணிகளை பறவைகள் என்பர். பறவையினங்களின் மொத்த எண்ணிக்கை  சுமார் 9000-க்கும் மேற்பட்டவை ஆகும். பறவையின் வாழ்வியல் முறைகளை அதன் காலில் வளையம் அணிந்து கண்டறிவர். பண்டையக் காலங்களில் புறா, பருந்து போன்றவை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தூது அனுப்புவதற்காக பயன்படுத்தினர். கோழி, சேவல், வாத்து, காடை, கௌதாரி போன்ற பறவைகளை உணவாக மனிதர்கள் உட்கொள்கின்றனர்.    பலவிதமான பறவைகள் உள்ளன.பறவைகள் மரங்களின் விதைகளை பரப்பும் அற்புத செயலை செய்கிறது.பறவையின் எச்சங்களின் மூலம்  விதைகள் பரவுகிறது. பறவையினங்கள் பெரும்பாலும் பறக்க கூடியவை ஆகும். ஆனால், பென்குவின் , கிவி போன்ற பறவைகளால் பறக்க இயலாது. 1.தெற்கு காசோவரி ( southern cassowary) - மூன்றாவது உயரமான மற்றும் இரண்டாவது கனமான பறவை. நெருப்புக்கோழி , ஈமுக்கள் போன்ற பறவை ஆகும்.
2.   விலங்கு எலும்பு கூடு பறவை (Takahe) -  இந்த பறவை நியூசிலாந்தில் காணப்படும்.இது பச்சை, நீளம் போன்ற வண்ணங்களை உடையது.இந்த பறவையின் வாழ்நாள் இருபது வருடங்கள் ஆகும்.


3. ஆந்தை கிளி (Kakapo) - இது பறக்காத தரையில் வாழக்கூடிய இரவாடி பறவை ஆகும்.இவை நியூசிலாந்தில் காணப்படும். உலகில் நீண்ட நாள் வாழக்கூடிய பறவைகளில் ஒன்று.சில கிளிகள் சுமார் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆந்தை கிளி மாவோரி பழங்குடியினரின் வாழ்வில் சிறப்பு மிக்கதாக இருந்தது.

4. கிவி (Kiwi) - இந்த பறவை நியூசிலாந்தில் காணப்படும்.இவை வெட்கம் கொண்ட பறவை ஆகும். இவை வளர்ச்சி பெற்ற புதனை கொண்டுள்ளது.இவற்றின் மூக்கின் நுனி கூராக இருக்கும். இதன் மூலம் மண்ணில் உட்செழுத்தி புழு, பூச்சிகளை உணவாக எடுத்துக்கொள்கிறது.
5. நெருப்புக் கோழி (Ostrich)   - இது பறவைகளின் ராஜா என அழைக்கப்படும். இது மிகப்பெரிய பறவை ஆகும்.இது 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இவை பழமையான பறவை இனத்தைச் சார்ந்தது. இவை நீண்ட கழுத்தையும்  , கால்களையும் கொண்டது. மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் ஓடும்.
6. வெக்கா (Weka) - இது நியூசிலாந்தில் உள்ள பறக்காத பறவைகளில் ஒன்றாகும். இவை பழங்கள் மற்றும் முதுகு நாணியற்றவைகளை உணவாக உட்கொள்ளும்.
7. நீராவி வாத்து (Steamer duck) - இவை தெற்கு அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவில் காணப்படும். இவ்வகை வாத்துகள் காற்றின் உதவியுடன் மிகவும் அரிதாகவே பறக்கும்.
8. பென்குவின் (Penguin) - இவை தென் துருவ பறவை வகை ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடையது. இவை வெப்பத்தை தக்க வைத்துக்கொள்வதால் அதிக குளிர் பகுதிகளில் வாழ்கின்றன. 18 வகையான பென்குவின்கள் உள்ளது. இவை அண்டார்டிகாவில் அதிகம் காணப்படும்.


Comments

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers

About virus and Viral Infections