தமிழ் மொழி

                 தமிழ் மொழி போல் இனிமையான மொழி வேறு எதுவுமில்லை. தமிழ் மொழி, திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தது.இது ஒரு செம்மொழியும் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளை கொண்டது. தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்த மொழி என்பதற்கு எடுத்துக்காட்டாக தொல்காப்பியம் விளங்குகிறது.இது தமிழ் மொழியின் இலக்கண நூல் ஆகும்.   

                                
                     தமிழறிஞர்கள் தமிழ் மொழி தோன்றிய வரலாற்றை 5 காலங்களாக வகைப்படுத்தி உள்ளனர்.   அவையாவன, ‌‌‌‌         
                     1.  சங்க காலம்   
                     2.   சங்கம் மருவிய காலம்
             ‌‌‌‌‌‌        3.   பக்தி இலக்கிய காலம் 
                     4.    மையக் காலம்    
                  ‌   5.   தற்காலம்     

 இவற்றில் பக்தி இலக்கிய காலம் மற்றும் மையக் காலக்கட்டத்தில் தமிழுடன் வடமொழி சொற்கள் கலந்து பேசப்பட்டது. தமிழ் மொழியில் இருந்து வட மொழியை நீக்கி தூய தமிழினை கொண்டு ‌‌‌வர தொடங்கிய இயக்கமே தனித்தமிழ் இயக்கம் ஆகும்.     
     
                 வேறு எந்த மொழிகளிலும் இல்லாத சிறப்பை தமிழ் மொழி பெற்றுள்ளது. அதிக எழுத்துக்களை கொண்டதாக தமிழ் மொழி விளங்குகிறது. உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 1 என்று மொத்தம் 247 எழுத்துக்களை கொண்டதாக திகழ்கிறது. தமிழ் மொழி எப்பொழுதும் தனிச்சிறப்பை பெற்றுள்ளது.தமிழ் மொழி பல்வேறு இலக்கணங்களை கொண்டுள்ளது. மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது இலக்கணம் ஆகும்.     
     
                  தற்காலத்தில், தமிழ் மொழி அழிந்து கொண்டு வருகிறது.தமிழ் மொழியை பெரும்பாலும் பிற மொழி கலந்து பேசுகின்றனர்.நாம் எந்த மொழிகளை கற்றாலும் நம் தாய் மொழியை மறக்க கூடாது.மொழி என்பது நம் எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே ஆகும்.எனவே, எந்த மொழியையும் இழிவுப்படுத்த கூடாது.நம் தாய் மொழியை அழிய விட கூடாது. தமிழ் மொழியை  காப்போம்!           


 With regards, 
Sandhiya Saravanan

Comments

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers

About virus and Viral Infections