‍The Rainforest

               
       மழைக்காடுகள் பசுமை வாய்ந்தவை ஆகும். இங்கு அதிக அளவிலான மழைப்பொழிவு காணப்படும். இவை பழமையான வாழ்க்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை கொண்டுள்ளது. மழைக்காடுகளில் வருடத்திற்கு 200 செ.மீ. மழை பதிவாகிறது. இவ்வகை காடுகள் விதானம் என்று சொல்லக்கூடிய மேற்பரப்பை கொண்டுள்ளது. இந்த மேற்பரப்பு அடர்ந்த கிளைகளால் சூழப்பட்டுள்ளது. 

          மழைக்காடுகளில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. உயிரினப்பல்வகைமை ( Biodiversity) தாவரங்கள் மற்றும் விலங்குகளோடு மட்டுமின்றி மண் வளம் , நீரின் தன்மை மற்றும் காற்றின் தூய்மை போன்றவற்றையும் சேரும். மழைக்காடுகளின் வானிலை மாறிக்கொண்டே இருக்கும். இவை உயிரினப்பல்வகைமையை பாதிக்கும்.

              மழைக்காடுகளிலே மிகப்பெரிய காடு அமேசான் காடு ஆகும். அமேசான் ஆறு  தென் அமெரிக்கா , வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் தெற்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆறுகளின் தலைமையிடமாக உள்ளது. மழைக்காடுகளிலே மிகச்சிறிய காடுகள் மத்திய அமெரிக்கா , மடகாஸ்கர் , ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.     


               அமேசான் காட்டின் சில பகுதிகள் காட்டுத்தீயினால் அழிந்து விட்டது. இன்னும் 80.5 சதவீத விழுக்காடு தான் உள்ளது. இதனால் பல்வேறு உயிரினங்கள் இறந்து விட்டன. 60 சதவீத விழுக்காடு அமேசான் காடு பிரேசிலில் காணப்படும். இந்த காடுகள் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில், உலகிற்கு அதிக அளவிலான ஆக்சிஜனை  கொடுக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை  உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. காடுகள் நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது. காடுகளை அழிக்காமல் பாதுகாக்கலாம். காடுகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறைவிடமாக உள்ளது.


With regards,
Sandhiya Saravanan

Comments

Popular posts from this blog

HIV virus and About viruses treatment

Plants and Tamil literary flowers

About virus and Viral Infections